அண்ணாமலை சட்டசபைக்கு வர வேண்டும்... வானதி சீனிவாசன்!

 
வானதி
 

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் என்பதால், அவர் சட்டசபைக்கு வருவது கட்சிக்கும் மாநிலத்துக்கும் பெரும் பலமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவையில் வர வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் விருப்பம்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தற்போது தேர்தல் பணிகளை தீவிரமாகத் தொடங்கியதாகவும், அதிமுக – பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி தோல்வியடைந்துவிட்டது, வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

அதே நேரம், தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகி செங்கோட்டையன் மீது வானதி சீனிவாசன் கடுமையான விமர்சனம் முன்வைத்தார். “செங்கோட்டையன் முதிர்ந்த அரசியல்வாதி. ஆனால் காலத்தின் கொடுமை காரணமாக தற்போது நடிகரோடு சேர்ந்திருக்கிறார் என்பது வேதனையாக உள்ளது” என அவர் கூறினார். இது பாஜக – அதிமுக கூட்டணியின் தேர்தல் தயாரிப்பையும், அண்ணாமலை மீதான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!