வந்தே பாரத் 4.0… அடுத்த 18 மாதங்களில் புது அதிவேக ரயில்!
வந்தே பாரத் 4.0 ரயிலை கொண்டு வர இந்திய ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த தலைமுறை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்கும் பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இதில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெறும் என கூறப்படுகிறது. சர்வதேச தரத்துக்கு இணையான ‘export-quality’ வடிவமைப்பில் இந்த ரயில் உருவாக்கப்பட உள்ளது.

2019ஆம் ஆண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டது. ஏசி சேர் கார், எக்ஸ்கியூடிவ் சேர் கார் என இரண்டு வகை பெட்டிகள் உள்ளன. தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் பயணிகள் தகவல் அமைப்பு, பயோ வேக்கம் கழிவறைகள், சுழலும் இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. இதுவரை 76 வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் 3.0 ரயில் 52 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதைத் தொடர்ந்து 4.0 ரயில் மேலும் மேம்படுத்தப்பட்ட வடிவில் வரும். அதிக வேகம், உயர்தர பாதுகாப்பு, புதிய ‘கவச் 5.0’ சிக்னல் அமைப்பு ஆகியவை இதில் இணைக்கப்பட உள்ளன. அடுத்த 18 மாதங்களில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
