வந்தே பாரத் ரயிலில் ரூ1500 கொடுத்து வாங்கிய டிக்கெட்டில் பயணம் செய்த செருப்பு... வைரல் வீடியோ!
வந்தே பாரத் ரயிலில் கைக்குழந்தைக்காக முன்பதிவு செய்த இருக்கையில் செருப்பை வைத்த பெண் பயணியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்த அவர், குழந்தைக்காக தனியாக இருக்கை முன்பதிவு செய்திருந்தார். அந்த இருக்கைக்காக சுமார் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பயணம் முழுவதும் குழந்தை பெற்றோரின் மடியிலேயே உறங்கியுள்ளது. இதனால் அந்த இருக்கை காலியாக இருந்தது.
காலியாக இருந்த இருக்கையில் 100 ரூபாய் மதிப்பிலான செருப்பை வைத்து வீடியோ எடுத்த அவர், அதை இணையத்தில் பகிர்ந்தார். “என் குழந்தை அமராத இருக்கையில் செருப்புதான் சொகுசாகப் பயணம் செய்கிறது” என அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரயில்வே கட்டண முறையை கிண்டலாக விமர்சிப்பதாக இருந்தது. வீடியோ வேகமாக பரவியதால் பெரும் விவாதம் கிளம்பியது. இணையவாசிகள் இரு தரப்பாகப் பிரிந்தனர்.
சிலர், ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதற்கான நகைச்சுவையான உதாரணம் இது எனக் கருத்து தெரிவித்தனர். ஆனால் பலர், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இருக்கை முன்பதிவு பெற்றோரின் விருப்பமே என விமர்சித்தனர். இருக்கையில் செருப்பை வைத்தது நாகரிகமற்ற செயல் என்றும் கூறினர். விளம்பரத்திற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. பணம் செலுத்திவிட்டு துறையைக் குறை கூறுவது முறையல்ல என எதிர்வினைகள் வலுத்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
