தண்டவாளத்தில் இரும்பு ராடு… ‘வந்தே பாரத்’ ரயிலை கவிழ்க்க சதி ?
கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சென்ற போது திடீரென நிறுத்தப்பட்டது. தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பால பகுதியில் தண்டவாளத்தின் மீது இரும்பு ராடு இருப்பதை கண்ட இன்ஜின் டிரைவர், உடனடியாக ரயிலை பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ரயில் ஏன் திடீரென நிறுத்தப்பட்டது என்ற குழப்பம் பயணிகளிடையே ஏற்பட்டது. இதுகுறித்து இன்ஜின் டிரைவர், ஜோலார்பேட்டை ரயில்நிலைய அதிகாரிகளுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடை அகற்றினர்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேர தாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்தது யார், ரயிலை கவிழ்க்க திட்டமிட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
