அசத்தல்... வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா… 2,500 கலைஞர்கள் கலாச்சார நடனம்!

 
vande matharam

 

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று ஒற்றுமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டது. நடப்பு ஆண்டில் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு நிறைவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. இதையொட்டி டெல்லி கடமை பாதையில் பிரம்மாண்ட கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குடியரசு

வந்தே மாதரம் இசைக்கு ஏற்ப 2,500 கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ண ஆடைகள் அணிந்து அவர்கள் நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

குடியரசு

1875-ம் ஆண்டு வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல் சுதந்திர போராட்டத்திற்கு ஊக்கமாக அமைந்தது. 150 ஆண்டு நிறைவையொட்டி “சுதந்திரத்திற்கான மந்திரம் வந்தே மாதரம், வளத்திற்கான மந்திரம் சுயசார்பு இந்தியா” என்ற கருத்துடன் அலங்கார வாகனங்கள் அணிவகுத்தன. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் மாநிலங்களின் ஊர்திகளும் இடம் பெற்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!