எத்தியோப்பியாவில் ‘வந்தே மாதரம்’… மோடி நெகிழ்ச்சி!

 
மோடி
 

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜோர்டான் சென்ற அவர், அந்நாட்டு மன்னர் அப்துல்லா–II முன்னிலையில் நடந்த இந்தியா–ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

ஜோர்டான் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, எத்தியோப்பியா சென்றடைந்தார். அங்கு பிரதமர் அபி அகமது அலியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ வழங்கப்பட்டது.

இதற்கிடையே எத்தியோப்பிய பிரதமர் அளித்த விருந்தில், அந்நாட்டு பாடகர்கள் மூவர் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடினர். இதைக் கேட்ட பிரதமர் மோடியும், இந்திய குழுவினரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக கூறிய மோடி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா காலத்தில் இது நடந்தது சிறப்பு என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!