பட்டா மாறுதலுக்கு ரூ.3,000 லஞ்சம்.. விஏஓ கைது!

 
பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய மேம்பத்தி கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை அணுகியுள்ளார். இதற்கு ரூ.5,000 லஞ்சம் தர வேண்டும் என பிரகாஷ் கேட்டுள்ளார். இதன்பின்னர், ரூ.3,000 மட்டும் கொடுத்தால் போதும் என வி.ஏ.ஓ. தெரிவித்துள்ளார்.

இளம் நடிகர் கைது

இது குறித்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கதிர்வேல் புகார் அளித்தார். இதன்பேரில், ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மறைந்திருந்தனர். பிரகாஷை சந்தித்து கதிர்வேல் பணம் கொடுத்தபோது, அவரது அருகில் நின்றிருந்த இடைத்தரகர் அருள்ராஜா பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?