வண்டிமலையான் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஸ்ரீவண்டி மலைச்சி சமேத ஸ்ரீவண்டிமலையான் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், கோபுர விமானம், அம்பாள் , சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சங்கரநயினார்புரம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி சமேத ஸ்ரீகோமதி அம்மன் கோயிலில் புதன் கிழமை நடைபெற்ற வருஷாபிஷேகத்தை யொட்டி காலை கணபதி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், கோபுரம் கலசம் மற்றும் சுவாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெர்றன. மதியம் அன்ன தானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!