வேம்படி இசக்கி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா!
Jun 20, 2025, 18:30 IST

தூத்துக்குடி வேம்படி இசக்கி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வேம்படி இசக்கி அம்மன் கோவில் எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று காலை 4 மணிக்கு மங்கல இசை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. காலை ஆறு மணிக்கு இசக்கி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் விமான அபிஷேகம், அதன்பின் இசக்கியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அலங்காரமாகி தீபாரணை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!