திருப்பதியில் வசந்த பஞ்சமி - வருடாந்திர உற்சவமாக மாறிய விசேஷ பூஜை!

 
திருப்பதி வசந்த பஞ்சமி: மலையப்ப சுவாமி திருப்பதி வசந்த பஞ்சமி: மலையப்ப சுவாமி

கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் வழிபாட்டுக்குரிய வசந்த பஞ்சமி நன்னாளில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

கோவிலின் உள்ளே அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அங்கு அர்ச்சகர்களால் சுவாமிக்குச் சிறப்புத் திருமஞ்சனம் (புனித நீராட்டு) மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. சதுர்தச கலச ஆராதனை, புண்யாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு வைதீகச் சடங்குகள் நடைபெற்றன. பூஜையின் நிறைவாக மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுப் 'பூர்ணாஹுதி' நடைபெற்றது. இந்த வைபவத்தில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருப்பதி பிரம்மோற்சவம் மலையப்ப சுவாமி

முன்பு இந்த விசேஷ பூஜைகள் வாராந்திர சேவையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உற்சவ மூர்த்திகளுக்கு (உலோகச் சிலைகள்) அடிக்கடி திருமஞ்சனம் செய்வதால் சிலைகள் தேய்மானம் அடைய வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஆகம வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.

எதிர்கால சந்ததியினருக்காக உற்சவ மூர்த்திகளைப் பாதுகாக்கும் நோக்கில், வசந்தோற்சவம் மற்றும் விசேஷ பூஜைகளை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வசந்த பஞ்சமி தினத்தில் மட்டும் இந்தச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!