வேதாந்தா தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் உயிரிழப்பு!
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால், பனிச்சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு உயிரிழந்தார். 49 வயதான அக்னிவேஷ், அமெரிக்காவில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா குழுமம், உலகளவில் கனிமம் மற்றும் சுரங்கத் தொழில்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த நிறுவனமும் இதுவே. அக்னிவேஷ் அகர்வால், வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், பல நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்த சோக செய்தியை அனில் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். “இது என் வாழ்வின் மிக இருண்ட நாள். என் அன்பு மகனை இழந்துவிட்டேன். அவர் மீண்டு வருவார் என நம்பியிருந்தோம். ஆனால் திடீர் மாரடைப்பு எங்களை சிதைத்துவிட்டது” என கூறியுள்ளார். மேலும், தனது வருமானத்தின் பெரும்பகுதியை சமூக நலனுக்காக வழங்கும் வாக்குறுதியை மீண்டும் உறுதி செய்து, எளிமையான வாழ்க்கை வாழ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
