காய்கறி விலை கிடுகிடு உயர்வு... முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
முருங்கைக்காய்

காய்கறிகளில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள முருங்கைக்காயின் விலை, தற்போது பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக மலிவாகக் கிடைக்கும் முருங்கைக்காய், தற்போது ஒரு கிலோவுக்கு ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முருங்கைக்காய் சாம்பார் மற்றும் கறி வகைகளுக்குத் தனிச் சுவையைக் கொடுக்கும். முருங்கைக்காய்க்கு மட்டுமல்லாமல், அதன் கீரைக்கும் கூட மக்களிடையே தனி மவுசு உண்டு. கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரங்களைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் முருங்கைக்காய், தற்போது பெரிய வெங்காயம், தக்காளி போல விலை உயர்ந்துள்ளது பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

காய்கறி கடை

பெங்களூருவில் தற்போது முருங்கைக்காயின் விலை நிலைமை நம்ப முடியாத அளவுக்கு உள்ளது: ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூருவின் மிகப் பெரிய சந்தையான கே.ஆர். மார்க்கெட்டில், ஒரே ஒரு ஜோடி முருங்கைக்காய் கூட ரூ. 100-க்கு விற்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெங்களூரு சந்தை வியாபாரி ஒருவர் அளித்த தகவலில், இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம், தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழைதான் என்று தெரிய வந்துள்ளது. பெங்களூருவுக்கு முருங்கைக்காய் வரத்து பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து தான் வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

முன்பு நாளொன்றுக்குச் சுமார் 100 டன் அளவில் முருங்கைக்காய் வரத்து இருந்தது. ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது வரத்து தினசரி 30 முதல் 40 டன் அளவிலேயே உள்ளது. வரத்துக் குறைவின் காரணமாகவே, மொத்த விலையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500-க்கும், சில்லறை விலையில் ரூ. 600-க்கும் விற்கப்படுகிறது. விலை இவ்வளவு அதிகமாக இருந்தாலும், முருங்கைக்காயின் தேவை குறையாததால், அவை வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் வியாபாரி தெரிவித்துள்ளார்.

முருங்கைக்காயைப் போலவே, தக்காளி விலையும் பெங்களூருவில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெங்களூருவுக்குத் தக்காளி வரத்து, கோலாரில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மற்றும் சிக்பள்ளாப்பூரில் இருந்து அதிக அளவில் வருகிறது. அங்கு 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டித் தக்காளி ரூ. 700-க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 முதல் ரூ. 90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு அத்தியாவசியக் காய்கறிகளின் விலை உயர்வும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அன்றாடச் சமையல் செலவுகளைப் பாதித்து, இல்லத்தரசிகளை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!