வேளச்சேரி ரயில் நிலையத்தில் முதல்முறையாக விளையாட்டு மையம் திறப்பு!

 
velacheri
 

சென்னை ரயில்வே கோட்டத்தில் முதல்முறையாக வேளச்சேரி ரயில் நிலைய வெளிப்புற பகுதியில் புதிய விளையாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் சமூக நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் தேஜ்பிரதாப் சிங் இந்த விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

தனியார் நிறுவனம் ஐந்து ஆண்டு உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மையத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் ரயில்வே துறைக்கு ரூ.12.07 லட்சம் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான வருவாய் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விளையாட்டு மையத்தில் பாக்ஸ் கிரிக்கெட், பிக்கிள்பால், ஸ்கேட்டிங் தளம் மற்றும் சிலம்பம் பயிற்சிக்கான பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்காக பயன்படுத்தவும் இந்த மையம் உதவும். சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுபோன்ற வசதி முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!