வெள்ளியங்கிரி மலை ஏறச் சென்ற இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழப்பு... பெரும் சோகம்!

 
வெள்ளியங்கிரி வெள்ளியங்கிரி

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. இந்த மலையில் ஏறி சாமி தரிசனம் செய்ய ஆன்மிக அன்பர்கள் பலர் மலையேற்றம் செய்வதுண்டு. ஆனால் சமீபகாலமாக மலையேறுபவர்களில் சிலர் மூச்சுத்திணறி பலியாகி விடும் சோக சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் மலையேற்றத்திற்கு சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெள்ளியங்கிரி

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையேற்றத்தின் போது முதலாவது மலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக உடன் பயணித்த அன்பர்கள் கூறுகின்றனர்.  உடனடியாக  உடன் சென்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றாலும், மூச்சுத்திணறல் அதிகரித்ததால் அவர்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 

கோவை வெள்ளியங்கிரி மலை

இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!