நாளை விஜய் பொதுக்கூட்டம் - வேலூரில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!

 
விஜய் டாஸ்மாக்

வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள 33 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்கள் திறந்தவெளியில் நடத்தப்பட்ட நிலையில், முதல்முறையாகத் தொண்டர்கள் வெயிலில் சிரமப்படாமல் இருக்க பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு அமர்ந்த இடத்திலேயே சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்க தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் நேரில் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடி உரையாற்றுகிறார்.

கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசலோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்படாமல் இருக்க, நாளை மாலை 6 மணி வரை அந்தக் கடையை மூடுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக்

தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக-வின் இந்தத் தொடர் மக்கள் சந்திப்புகள் மற்றும் வேலூரில் செய்யப்பட்டுள்ள முறையான வசதிகள் அக்கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!