தயிர் சாதத்துக்கே அத்தனை கோபம் வந்தா, நாங்க நல்லி எலும்பு எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? நிர்மலா சீதாராமனை சீண்டிய வேல்முருகன்!

தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒன்றிய அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது குறித்து கண்டனம் தெரிவித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தாய்மொழிக் கல்வியை தடுக்காதே என ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிர்மலா சீதாராமனை சீண்டியுள்ளார்.அதன்படி தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே அவ்வளவு கோபம் வந்தா நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? எனக் கூறியுள்ளார்.
“தயிர் சோறு சாப்பிடும் நிர்மலா சீதாராமன் மாமிக்கு அவ்வளவு கோபம் வரும்போது நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?. மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். நம் முன் அவர்கள் மண்டியிடுவார்கள். தொடந்து ஜனநாயக முறைப்படி செயல்படுகிறோம். ஆனால் நம்மை தூசியாக கூட மதிக்கவில்லை. மத்திய அரசிற்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!