ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை கூப்பிட மாட்டார்கள்... எஸ்.பி. வேலுமணி பளிச்!

 
வேலுமணி
 


 
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில்  “சிறுவாணி அணையில் அதிமுக ஆட்சியில்  50 அடி தண்ணீர் தூக்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் அணை நீர்மட்டத்தை குறைத்தனர். இப்போது சிறுவாணி தண்ணீர்  40 அடிக்கு மேல் தண்ணீர் வைப்பது இல்லை. சிறுவாணி அணையில்  50 அடிக்கு உடனடியாக தண்ணீர் வைக்க வேண்டும், அடிக்கடி தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் 10 நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.
 
Image
பேரூர் ஆதீனத்தில் நடைபெற்றது கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசமி  அடிகளார் நூற்றாண்டு நிகழ்விற்குதான் சென்றோம். வருடா வருடம் சாந்தலிங்க அடிகளார் ஜீவசமாதி அடைந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கம். எங்களுக்கு அதில் பங்கேற்க தான் அழைப்பு விடுக்கப்பட்டது. 

வேலுமணி அமைச்சர்

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை கூப்பிட மாட்டார்கள். நாங்களும் பங்கேற்க மாட்டோம். எங்களை அழைத்தது சாந்தலிங்க  ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு தான். ஆனால்  ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் பரப்பபடுகின்றது. மடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிற்கு தான் சென்றோம். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.அடிகளாரின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன் பகவத் அழைக்கப்பட்டார். அது என்னுடைய தொகுதி என்பதால் அவருக்கு முருகன் சிலை, வேல் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது.” என விளக்கம் அளித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது