உடல் உறுப்பு தானம் செய்த சிறுமி வெண்பா இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

 
வெண்பா

 

கோயம்புத்தூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்றார். பெற்றோர் சோமு (எ) சந்தோஷ் – சுகன்யாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். துயரமான சூழலிலும் மனிதநேய முடிவு எடுத்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறினார்.

venba

தமிழ்நாடு உறுப்பு தானத்தில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என 23.9.2023 அன்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் இந்த அர்ப்பணிப்பு சமூகத்தில் பெரும் மரியாதையை பெற்றுள்ளது.

“உடலுறுப்புகளை கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் என்றும் வாழ்வாள்” என முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டார். பெற்றோரின் தியாக மனப்பான்மைக்கு சமூகமே ஆறுதலாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!