வெனிசுவேலாவில் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்!
காரகாஸ் (வெனிசுவேலா): வெனிசுவேலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸை, நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யவும், விரிவான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதிபர் நிகோலஸ் மதுரோவின் திடீர் நீக்கத்தைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சனிக்கிழமையன்று (ஜனவரி 3, 2026) அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட நிகழ்வாகும்.
வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவிற்குப் பெரும் அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்தார். போதைப் பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார்.
நிகோலஸ் மதுரோவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பார்க்கப்பட்டவர். 2018 முதல் வெனிசுவேலாவின் துணை அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில், ராணுவம் மற்றும் நாட்டின் முக்கிய அமைப்புகளை வழிநடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிபர் மதுரோவின் கைது மற்றும் புதிய இடைக்கால அதிபரின் நியமனம் காரணமாக வெனிசுவேலாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
