வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா !
உக்ரைன்–ரஷியா போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷியா எண்ணெய் வருவாயை போருக்காக பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், மலிவு விலையில் எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்ததால் இந்தியா அந்த அழுத்தத்தை நிராகரித்தது. இதையடுத்து ரஷியா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.

இதற்கிடையே வெனிசுலா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெய் அளவை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷியா எண்ணெய் கொள்முதலை குறைத்தால் வெனிசுலா எண்ணெயை இந்தியா வாங்கலாம் என அமெரிக்கா கூறியது. இதனால் இரு தரப்புக்கும் விதிக்கப்படும் வரியை தவிர்க்க இந்தியா புதிய முடிவை எடுத்துள்ளது.

வருங்காலத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவை படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில் 12 லட்சம் பேரலாக இருந்த கொள்முதல், பிப்ரவரியில் 10 லட்சமாகவும், மார்சில் 8 லட்சமாகவும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. இந்தியா தனது எண்ணெய் ஆதாரங்களை பல்வகைப்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
