வெனிசுலாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு விரைவில் பதிலடி... டிரம்ப் எச்சரிக்கை !

 
ட்ரம்ப்
 

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு, போதைப்பொருள் ஒழிப்பை காரணமாகக் கொண்டு கரீபியன் கடற்பகுதிகளில் தொடர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 2 அன்று அமெரிக்க கடற்படை, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட பல படகுகளை தாக்கி அழித்தது. பின்னரும் நடந்த தாக்குதல்களில் 80 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் உண்மையில் கடத்தல்காரர்களா என்ற சந்தேகம் பல நாடுகளில் எழுந்துள்ளது.

இந்த கடத்தல் வலையில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் சர்வதேச ரீதியில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், வெனிசுலாவுக்குள் பதுங்கி இருக்கும் ‘கெட்டவர்களை’ விரைவில் தாக்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என தெரிவித்தார். நிலம் வழியாக தாக்குதல் நடத்துவது எளிது என்றும், அவர்கள் எங்கு இருப்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா வெனிசுலா எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!