வெனிசுலாவை அமெரிக்கா நேரடியாக நிர்வாகம் செய்யாது... ட்ரம்ப் அதிரடி!
தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய தாக்குதலில் ராணுவ தளங்களும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளும் குறிவைக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ரஷ்யா, கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. இது வெனிசுலாவின் இறையாண்மையை மீறும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்றும், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் ரஷ்யா கூறியுள்ளது. லத்தீன் அமெரிக்காவை அமைதிப் பிரதேசமாகக் கருதும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என கியூபா தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு மற்றும் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றும் நோக்கமே இந்த தாக்குதலுக்குக் காரணம் என வெனிசுலா அரசு கூறியுள்ளது. இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
