TNPSC-ன் புதிய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ் நியமனம்!

 
வேங்கடபிரியா

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் தேர்வு முறைகேடு புகார்களுக்கு மத்தியில், அதன் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி வந்த அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ் இதற்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுப் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேங்கடபிரியா

நேற்று பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தேர்வர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது:

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளை எவ்விதக் குளறுபடியும் இன்றி மீண்டும் நடத்துவது மற்றும் தேர்வாணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது ஆகியவையே புதிய அலுவலரின் முதன்மையான சவால்களாக இருக்கும். தேர்வாணையத்தின் மென்பொருள் மற்றும் மைய ஒதுக்கீடு முறைகளில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் இவருக்கு உள்ளது.

இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

அரசுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேர்வு நடைமுறைகளை வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு வரவும் இந்த மாற்றத்தைத் தலைமைச் செயலகம் மேற்கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த நியமனம் தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!