வெர்ஸ் இன்னோவேஷன் அதிரடி: டெலாய்ட் முன்னாள் தலைவர் பி.ஆர். ரமேஷ் இயக்குநராக நியமனம் - நிறுவன நிர்வாகத்தை வலுப்படுத்த வியூகம்!

 
ramesh ramesh

டிஜிட்டல் ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான வெர்ஸ் இன்னோவேஷன், தனது நிர்வாகக் குழுவில் உலகத்தரம் வாய்ந்த அனுபவம் கொண்ட பி.ஆர். ரமேஷ் அவர்களை இணைத்துக் கொண்டுள்ளது.

யார் இந்த பி.ஆர். ரமேஷ்?

பி.ஆர். ரமேஷ் அவர்கள் நிதி மேலாண்மை, கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை ஆலோசனைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சார்டட் அக்கவுண்டண்ட். டெலாய்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் மற்றும் டெலாய்ட் குளோபல் போர்டு உறுப்பினர். இதற்கு முன்பு ஏர் இந்தியா, சிப்லா, நெஸ்லே இந்தியா, லார்சன் & டூப்ரோ, ஐடிசி ஹோட்டல்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆசிய கார்ப்பரேட் நிர்வாக மையத்தின் 'சிறந்த தனிப்பட்ட இயக்குநர்' விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனத்தில் பி.ஆர். ரமேஷ் அவர்கள் தணிக்கைக் குழுவின் தலைவராகச் செயல்படுவார். நிதி நிலை அறிக்கைகளின் உண்மைத்தன்மை, உள்நாட்டு நிதித் தணிக்கை மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை அவர் கண்காணிப்பார். நிறுவனத்தின் செயல்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கும் திட்டங்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

இந்த நியமனம் குறித்து வெர்ஸ் இன்னோவேஷன் இணை நிறுவனர் உமாங் பேடி கூறுகையில், "ஒரு நிறுவனம் காலத்தை வென்று நிலைத்து நிற்க வலுவான நிர்வாகமும், நிதி ஒழுக்கமும் அவசியம். பி.ஆர். ரமேஷ் அவர்களின் உலகளாவிய அனுபவம் எங்களது நிர்வாகத் தரத்தை உயர்த்தவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும்."

பி.ஆர். ரமேஷ் தனது நியமனம் குறித்துக் கூறுகையில், வெர்ஸ் நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் நிலப்பரப்பில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளதாகவும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப நிதித் தரக்கட்டுப்பாடுகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யத் தான் பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெர்ஸ் இன்னோவேஷன், பிராந்திய மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், கத்தார் முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!