பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ஷெஃபாலி ஜரிவாலா


பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா. இவர்   மும்பையில் மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 42. பிரபல இசை வீடியோ காந்தா லகா Kaanta Laga மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஷெஃபாலி ஜரிவாலா புகழின் உச்சம் தொட்டார்.   இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் காலமானார். அவரது ரசிகர்கள் இத்தகவலால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

ஷெஃபாலி ஜரிவாலா

நேற்று ஜூன் 27ம் தேதி இரவு ஷெஃபாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது கணவர் பராக் தியாகி, மேலும் 3  பேருடன் சேர்ந்து, மும்பையின் அந்தேரியில் உள்ள பெல்லூவ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். மருத்துவமனையில்  ஷெஃபாலியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஷெஃபாலி ஜரிவாலா
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. ஷெபாலியின் மரணம் ரசிகர்களையும், சக நடிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகை திவ்யங்கா திரிபாதி தனது எக்ஸ் பக்கத்தில்  “ஷெஃபாலி பற்றிய செய்தியை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சீக்கிரம் போய்விட்டார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது