பிரபல நடிகை ராஷ்மி லீலா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி!

 
ராஷ்மி

பிரபல கன்னட திரைப்பட நடிகை ராஷ்மி லீலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 37. கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை ராஷ்மி லீலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இந்த துயரச் செய்தி வெளியானதும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ராஷ்மி லீலா, 2019-ஆம் ஆண்டு முதல் தீவிர நுரையீரல் தழும்பேறுதல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் காணவில்லை.

சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!