#VibeWithMKS: நான் ரெடி! நீங்க ரெடியா?" | இளைஞர்களுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின்

தமிழக அரசியலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எப்போதும் முன்னோடியாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது இளைஞர்களைக் கவரும் வகையில் 'வைப் வித் எம்.கே.எஸ்' (Vibe With MKS) என்ற புதிய டிஜிட்டல் தொடரைத் தொடங்கியுள்ளார். இதற்கான டீசர் நேற்று வெளியாகி, இணையவாசிகளிடையே காட்டுத்தீயாய் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான மேடைப் பேச்சுகள் மற்றும் அரசு விழாக்களில் இருந்து விலகி, முற்றிலும் புதிய கோணத்தில் இளைஞர்களுடன் நேரடியாக உரையாடும் பாலமாக இந்த நிகழ்ச்சி அமையப் போகிறது.

ஸ்டாலின்

யங் சாம்பியன்களுடன் முதல் சந்திப்பு: இந்தத் தொடரின் முதல் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். விளையாட்டுத் துறை என்பது வெறும் வெற்றி தோல்வி சார்ந்தது மட்டுமல்ல, அது ஒழுக்கம் (Discipline), தன்னம்பிக்கை (Confidence) மற்றும் ஆளுமையை (Character) உருவாக்குவது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது. "இளம் சாம்பியன்களுடன் அவர்களின் ஆர்வம் (Passion), அழுத்தம் (Pressure) மற்றும் விடாமுயற்சி (Perseverance) பற்றி இதோ எனது உரையாடல்... நான் ரெடி! நீங்க ரெடியா?" எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் முதல்வர் பதிவிட்டுள்ள கேள்வி இளைஞர்களைக் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான தளம்: இனி வரும் நாட்களில், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளைச் சார்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச உள்ளார். அவர்களின் உண்மைக் கதைகளைக் கேட்டறிவதுடன், அடுத்த தலைமுறையின் லட்சியங்கள் மற்றும் கனவுகளுக்கு அரசு எந்த வகையில் துணையாக இருக்கும் என்பது குறித்தும் இந்தத் தொடரில் விவாதிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல், ஒரு வழிகாட்டியாக இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த 'மக்கள் சார்ந்த உரையாடல்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

சமூக வலைதளங்களில் முதலமைச்சரின் இந்த புதிய முயற்சிக்குத் தற்போதே பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களின் மொழியில் 'வைப்' (Vibe) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்தத் தொடர் பெயரிடப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 தேர்தலை முன்னிறுத்தி இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் ஒரு மாபெரும் டிஜிட்டல் வியூகமாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!