துணை ஜனாதிபதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர். இவர் மார்ச் 9ம் தேதி திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அதிகாலை 2 மணி அளவில் அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு 73 வயதான ஜெகதீப் தன்கரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், பா.ஜனதா தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜெகதீப் தன்கரிடம் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தற்போது குணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!