ஏப்16ல் துணைவேந்தா்கள் கூட்டம்.. முதல்வா் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம்!

 
முதல்வர்
ஏப்ரல் 16ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது முதல்வர் ஸ்டாலின் நடைபெற உள்ள முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்சநீதிமன்ற அனுமதி அளித்ததன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் கடந்த ஏப்.12ம் தேதி வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் முதல்வா் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன அதிகார மசோதா, வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி காலதாமதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அதற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிா்ணயம் செய்யக்கோரியும் தமிழக அரசு கடந்த 2023-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

அந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது.

தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, ராகேஷ் துவிவேதி ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

ஆளுநா் தரப்பில் மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் ஆா்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோா் வாதிட்டனா். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த ஏப்.8-இல் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

ஸ்டாலின் -ஆளுநர் கவர்னர்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் நிறுத்தி வைத்து பின்னா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல் சட்டத்து எதிரானது என்று தீா்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு மசோதாக்களை தாமதப்படுத்த ஆளுநருக்கு தனி அதிகாரம் ஏதுமில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதேபோல மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும் என்றும் கால வரையறையை உச்சநீதிமன்றம் நிா்ணயித்தது. இதன் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டது.

தொடா்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக சனிக்கிழமை அரசிதழில் அறிவிப்பு வெளியானது. வருங்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வா் வசமாகியுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'தமிழக முதல்வா் தலைமையில் வரும் புதன்கிழமை (ஏப்.16) மாலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் தமிழகத்தின் உயா்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஆளுநா் ஆா்.என்.ரவி வசமிருந்த அதிகாரங்கள், உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்றடைந்த நிலையில், நடைபெறும் முதல் கூட்டம் இதுவென்பதால் பல்கலைக்கழக அளவில் மட்டுமல்லாது மாநில அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

நிா்வாகம் மற்றும் அதிகார ரீதியாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய சீரமைப்புகள், மாற்றங்கள் குறித்து சில முக்கிய அறிவிப்புகள் அக்கூட்டத்தில் வெளியாகலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web