விக்டோரியா அரங்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு... ஆன்லைன் பதிவு அவசியம்!
சென்னையின் தொன்மைச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கடந்த 23.12.2025 அன்று முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கத்தை தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 6 காட்சி நேரங்களில் பார்வையிடலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு அவசியம்.

இந்திய குடிமக்களுக்கு ரூ.25, மாணவர்களுக்கு ரூ.10, மூத்த குடிமக்களுக்கு ரூ.10, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் இலவசமாக பார்வையிடலாம். பள்ளிகள் மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்யலாம்.

அரங்கத்தை நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி, அரசு, கலை, புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் சினிமா நிகழ்வுகளுக்கு ரூ.1 லட்சம் வசூலிக்கப்படும். திறந்த வெளி அரங்கம் நாள் ஒன்றுக்கு ரூ.10,000 கட்டணத்தில் பயன்படுத்தலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
