வீடியோ!! கண் கலங்கி, கதறி அழுத பாரதிராஜா !! பிரபல தயாரிப்பாளர் மரணம்!!

 
பாரதிராஜா

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து தயாரிப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டவர் , சி.என்.ஜெயக்குமார்.இவர்  உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார்.  பிரபலங்கள், மூத்த  திரைத்துறையினரின் அடுத்தடுத்த திடீர் உயிரிழப்புக்கள் சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடம்  பிறந்து 3 மாதங்கள் கூட முழுவதுமாக முடியவில்லை. அதற்குள் வரிசையாக சில எதிர்பாராத மரணங்கள், திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காமெடி நடிகர் மயில் சாமி உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழ் திரையுலகையே கலங்க செய்தது. அந்த சோகமே இன்னும் முழுமையாக கரையாத  நிலையில் பிரபல தயாரிப்பாளர் உயிரிழந்துள்ளார்." புது நெல்லு புது நாத்து " படத்தின் தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இவரது உடலுக்கு இன்று இயக்குனர் பாரதிராஜா, கண் கலங்கியபடி நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜெயக்குமார்

அத்துடன் புதிய நீதிக்கட்சி தலைவர்  ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி  தாணு , தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன் ,  முரளி, நடிகர் மனோஜ் பாரதிராஜா மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள்  என பல பிரபலங்கள், திரைத்துறையினர்  நேரில் அஞ்சலி செலுத்தினர்.இவருடைய உடல் ஷெனாய் நகரில் உள்ள, அவரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  மாலை இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web