வீடியோ!! நள்ளிரவில் ஆஸ்கர் நாயகனுக்கு வாழ்த்து மழை!! ரசிகர்கள் உற்சாகம்!!

 
ராம்சரண்

 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 13ம் தேதி பிரம்மாண்டமாக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு... நாட்டு... பாடலுக்கு வழங்கப்பட்டது. அதே போல் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' படம் ஆஸ்கார் விருது வென்றது. இதனால், இந்திய திரை துறைக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்து உள்ளன.


இந்த விருதை பெற்றுக்கொண்டு தற்போது ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் இந்தியா  திரும்பினர்.  இந்த குழுவில் இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி ரமா, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அவரது குடும்பத்தினர் இவர்களுடன் ஆர்.ஆர்.ஆர் படத்தின் கதாநாயகன் நடிகர் ராம்சரணும் வந்திருந்தனர்.  நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ராம்சரண் இறங்கிய போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண்  சந்தித்தனர். இதுகுறித்து அமைச்சர்  அமித்ஷா டுவிட்டர்  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இடம், தேதி அறிவிப்பு!

அதில் இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆர்.ஆர்.ஆர். படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி மற்றும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது இவற்றுக்காக ராம்சரணுக்கு வாழ்த்துகள். நேற்றிரவு வரை டெல்லியிலேயே தங்கிய நடிகர் ராம்சரண், அதன்பிறகு  ஐதராபாத்திற்கு வருகை தந்தார். நள்ளிரவு நேரத்திலும் அவரை காணவும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவும், வரவேற்கவும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறந்த நிலையிலான காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அவருடைய வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web