வீடியோ!! பள்ளி மாணவன் மாரடைப்பால் பலி!! கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்!!

 
மயங்க்

முன்பெல்லாம் 60 அல்லது 70 வயதிற்கு மேல் தான் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பர். வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவதுண்டு. தற்போது சின்னஞ்சிறு வயதில் வாழ வேண்டிய இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெற்றோர்கள், மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் என பல காரணங்கள் கூறப்பட்டாலும்  இளைஞர்கள் திடீரென உயிரிழப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சாக வேண்டிய வயசா இது என்று தமிழில் ஒரு வாக்கியம் சொல்லுவார்கள். இளம் வயதில் யாராவது மரணம் அடைந்தால் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்தியாவில் தற்போது அடிக்கடி இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இளைஞர்கள் பலர் இது போன்ற மாரடைப்பு காரணமாக திடீர் திடீரென மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

அந்த வகையில், 11-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் புகழ்பெற்ற மகாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பஞ்சமி தின விழாவில் நடந்த நிகழ்ச்சியில், மயங்க் என்ற 17 வயது பள்ளி மாணவர், வாள்வீச்சு சாகசம் செய்து காட்டியுள்ளார்.

மயங்க்

பின்பு வீட்டிற்கு சென்று மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மயங்க் இறப்பதற்கு முன்பு வாள்வீச்சு சாகசம் செய்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web