வீடியோ!! சென்னையின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு கடைகள் , பழக்கடைகள், பழரசக் கடைகள், கம்மஞ்கஞ்சி என சாலையோரங்களில் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட பல பகுதிகளில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


அதிகாலை  லேசான சாரல் மழைக்கு பிறகு வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை 11 மணிக்கு பிறகு  மீண்டும் சென்னை அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மழை
வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்  என நகரின் பல இடங்களில் மழை பெய்து வருவதால், சாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வில்லிவாக்கத்தில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தால் காய்ந்த மக்களுக்கு இந்த திடீர் மழை பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web