வீடியோ: பிரேசிலில் அசுர புயல் காற்றில் 114 அடி உயர சுதந்திர தேவி சிலை உடைந்து விழுந்தது!
பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் குறிப்பாகக் குவாய்பா (Guaíba) நகரில் அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை (Statue of Liberty) பலத்த காற்றினால் சரிந்து விழுந்து சேதமடைந்தது.
குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தபோது, மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இந்த வேகத்தைத் தாங்க முடியாமல், அங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் முன்பு நிறுவப்பட்டிருந்த 114 அடி உயரமுள்ள சுதந்திர தேவி மாதிரி சிலை அப்படியே சரிந்து விழுந்தது. சிலையானது தரையில் மோதிய வேகத்தில் அதன் தலைப் பகுதி துண்டு துண்டாக உடைந்து சிதறியது.
Video footage shows a forty-meter-tall replica of the Statue of Liberty, located across from a McDonald's within the parking lot of a Havan in the Brazilian city of Guaíba, one of several dozen replicas of the statue located throughout the country, collapsing during a wind and… pic.twitter.com/kUid9lwA3b
— OSINTdefender (@sentdefender) December 15, 2025
சிலை விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானபோது, முதலில் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று பலரும் கருதினர். ஆனால், பின்னர் அது உண்மையான சம்பவம் என்பது உறுதி செய்யப்பட்டபோது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு பெரிய மற்றும் உறுதியான சிலை காற்றில் எப்படி விழுந்தது என்ற கேள்விகள் எழுந்தன.
சிலை அசையத் தொடங்கிய உடனேயே, பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அந்தப் பகுதி முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், உடைந்த சிலையின் பாகங்களை அப்புறப்படுத்தினர்.
இந்தச் சிலை பிரேசில் நாட்டின் தொழில்நுட்பத் தர நிலைகளைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, வானிலை மாற்றத்தைத் தாண்டி சிலை விழுந்ததற்கு வேறு ஏதேனும் கட்டுமானக் கோளாறுகள் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
