பகீர் வீடியோ... சிறுமியை கடித்து குதறிய தெருநாய்... பள்ளிக்குச் சென்ற போது விபரீதம்!
பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த சிறுமியை தெருநாய் ஒன்று, கடித்துக் குதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைக்க செய்கிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிக்கும் யுகேஜி படித்து வரும் ஐந்து வயது சிறுமி ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல வீட்டின் அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு தெருநாய் திடீரென பாய்ந்து சிறுமியின் முகத்தில் கடித்து கொடூரமாக தாக்கியது.
Hyderabad : Five-year-old Paka Sharvi, a UKG student, was brutally attacked by a stray dog while playing outside her residence in Khairatabad. She is currently undergoing treatment at a private hospital.#CCTV #dogbite #Hyderabad pic.twitter.com/rQnEGI0XES
— Nawab Abrar (@nawababrar131) January 27, 2026
சிறுமியை தரையில் தள்ளி கன்னத்தில் கடித்துக் கொண்டிருந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் நாயை விரட்டி குழந்தையை காப்பாற்றினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வலுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
