பகீர் வீடியோ... குடும்பத்தினரைத் தாக்கி, இளைஞரை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த கும்பல்!

 
சிசிடிவி

டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் கடந்த ஜனவரி 2ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்ஷ்மி நகரில் ராஜேஷ் கர்க் என்பவர் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வேலை செய்த சதீஸ் யாதவ் என்பவர், அந்த ஜிம்மை முறையற்ற வகையில் கைப்பற்ற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தின் உச்சமாக, சதீஸ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ராஜேஷ் கர்க் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

ராஜேஷ் கர்க்கின் மகனை நடுரோட்டில் இழுத்து வந்து, அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாக்குதலைத் தடுக்க முயன்ற ராஜேஷ் கர்க்கின் மனைவியும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ராஜேஷ் கர்க் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெ

சம்பவம் நடந்த ஜனவரி 2ம் தேதியே இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வீடியோவில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் முகங்கள் தெளிவாகத் தெரிவதால், அவர்களைக் கைது செய்யும் பணியில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தனைக்கும் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளைஞனை நிர்வாணமாக்கி அந்த கும்பல் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!