நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித் குமார். இவர் நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞரை போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) அஜித் வலிப்பு நோயாலும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாலும் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.#AjithkumarMysteryDeath pic.twitter.com/KYLg19j9RQ
— patrikai.com (@Patrikaidotcom) July 1, 2025
இந்த வீடியோவில், சீருடை அணியாத காவலர்கள் அஜித் குமாரை கம்பத்தில் கட்டி, கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஆனால், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அஜித் வலிப்பு நோயாலும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாலும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவை அஜித் குமாரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அஜித் குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!