ஆட்டோ கண்ணாடி வழியாக பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை - வீடியோ !!

 
பெண் பத்திரிகையாளர்

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நிகழ்ந்துவருவதாக கூறப்படுகிறது. நிர்பயா முதல் தொடர்ச்சியாக நடைபெறும் பெண் வன்கொடுமைகளால் பெரும் பதற்றத்தில் இருக்கிறது.. இந்த நிலையில், டெல்லியில் முன்னணி பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் அளித்துள்ள புகார்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பத்திரிகையாளர் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து, மாளவியா நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு உபர் செயலி மூலம் ஆட்டோவில் பயணித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்

ஆட்டோவை வினோத் குமார் என்பவர் ஓட்டியுள்ளார். ஆட்டோவில் பெண் பத்திரிகையாளர் சென்றுக்கொண்டிருக்கும், ஆட்டோவில் பின்பக்கம் வாகனத்தை பார்க்கும் கண்ணாடி மூலம் பெண் பத்திரிக்கையாளர்களின் மார்பகங்களை பார்த்ததாகவும், இதனை அறிந்து, அந்த பெண் இடம் மாறி அமர்ந்தாலும், மீண்டும் அதே போல அந்த ஆட்டோ ஓட்டுநர் மறுபக்க கண்ணாடி மூலம் தனது மார்பகங்களை பார்த்தாக பெண் பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உபேர் செயலி பாதுகாப்பு அம்சத்தை தொடர்பு கொண்டாலும் எந்த பயனும் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து பெண் பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், ஆட்டோவில் இருந்து இறங்கும்போது ஆட்டோ ஓட்டுனரிடம் அவரது நடவடிக்கை தொடர்பாக புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார். அதற்கு ‘புகார் அளியுங்கள்’ என ஆட்டோ ஓட்டுநர் கூறியதாகவும் பெண் பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண் பத்திரிகையாளர்

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் என்பவர் மீது, இந்திய தண்டனை பிரிவு 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் விதமாக வார்த்தை, சைகை அல்லது செயல் மூலம் நடந்து கொள்வது.) கீழ் டெல்லி காவல் துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் தலைமறைவாக உள்ளதால் போலீசார்  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web