முருகன் காவடியில் 'தவெக' கொடி - வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்துப் பாதயாத்திரையாகத் திருச்செந்தூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
#தவெக கொடியுடன் காவடி 🔥🔥 pic.twitter.com/bTdu8faid5
— Hemanth TVK !! (@kingslyhemanth) February 21, 2026
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை மற்றும் இரணியல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள், 41 நாட்கள் கடும் விரதமிருந்து நேற்று காவடி எடுத்துப் புறப்பட்டனர். திங்கள்சந்தை பகுதியில் பறக்கும் காவடி எடுத்து வந்த பக்தர் ஒருவரின் கையில், அங்கிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது கட்சிக் கொடியைக் கொடுத்துள்ளனர். அந்த பக்தர் கொடியைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி வர, கீழே இருந்த அக்கட்சியினர் கொடியை உயர்த்திப் பிடித்து உற்சாகமாகக் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாகத் தங்கள் நேர்த்திக்கடனுக்காக உடல் வலிக்கக் காவடி சுமந்து வரும் பக்தர்களை, அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது முறையற்றது என ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்மிகத்தில் அரசியலைப் புகுத்தக் கூடாது" என்று கூறி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேர்த்திக்கடன் செலுத்தும் புனிதமான நிகழ்வில், அரசியல் அடையாளத்தைப் புகுத்தியது தேவையற்ற ஒன்று எனப் பாதயாத்திரை சென்ற பிற பக்தர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
