அதிர்ச்சி வீடியோ: மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற விமானம் விபத்து... 7 பேர் பலி; 130 பேர் வெளியேற்றம்!

 
மெக்சிகோ

மெக்சிகோவில் திங்கட்கிழமை அன்று அவசரமாகத் தரையிறங்க முயன்ற ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரின் ஹெர்ன்டெஸ் உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம் மெக்சிகோ மக்களிடையேப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள தொழில்துறைப் பகுதியான சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. கடலோர நகரமான அகாபுல்கோவிலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் விபத்தில் சிக்கியது. விமானம் ஒரு கால்பந்து மைதானத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றதாகவும், ஆனால் அருகிலுள்ள வணிக நிறுவனத்தின் உலோகக் கூரையில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.


தீ விபத்தின் தீவிரம் காரணமாக, தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ளக் கட்டிடங்களில் இருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டனர். அவசரகாலக் குழுக்கள் சம்பவ இடத்தில் பல மணி நேரம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, இடிபாடுகளை அகற்றினர்.

மெக்சிகோ

மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானத்தில் எட்டு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். விபத்து நடந்த பல மணி நேரத்திற்குள், மீட்புக் குழுக்கள் இடிபாடுகளில் இருந்து ஏழு உடல்களைக் கண்டுபிடித்தனர். இறுதி இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்கானச் சரியான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!