ஆபாச வீடியோ... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண்!
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு மோசடி வலையில் சிக்கிய அந்த மடாதிபதி, மீண்டும் ஒரு இளம்பெண்ணால் மிரட்டலுக்கு உள்ளாகியிருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடாதிபதி அலுவல் விஷயமாகப் பெங்களூரு வந்திருந்த போது, சிக்கமகளூருவைச் சேர்ந்த ஸ்பூர்த்தி (25) என்ற இளம்பெண் அவரைச் சந்தித்துள்ளார். தன்னிடம் மடாதிபதியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு கோடி தர மறுத்த மடாதிபதி, மிரட்டலுக்குப் பயந்து முதற்கட்டமாக 4.5 லட்சம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து மீதிப் பணத்தைக் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண்ணின் மிரட்டல் அதிகரித்ததால், வேறு வழியின்றி மடாதிபதி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ஸ்பூர்த்தியை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
விசாரணையின் போது, மடாதிபதியை மிரட்டிப் பணம் பறித்ததை ஸ்பூர்த்தி ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து மிரட்டலுக்குப் பயன்படுத்திய செல்போன் மற்றும் பறிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தத் திட்டமிட்ட மிரட்டலுக்குப் பின்னால் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா அல்லது வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
