விஜய் கூட்டத்திற்கு 5 கண்டிஷனுடன் அனுமதி... 'கூட்டம் முடிந்ததும் சுத்தம் செய்து தர உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தை உபயோகப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் சுகுமார் 5 முக்கிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தின் மூலம் குப்பைகள் எதுவும் சேராமல், கூட்டம் முடிந்த பின் சொந்தச் செலவில் இடத்தை முழுமையாகச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தவெகவின் பொதுக்கூட்டத்திற்காக இடத்தை வாடகைக்கு எடுப்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறை விதித்துள்ள 5 முக்கிய நிபந்தனைகள் பின்வருமாறு:
வாடகை மற்றும் டெபாசிட்: ₹50,000 வாடகையும், கூடுதலாக ₹50,000 டெபாசிட் தொகையும் கட்டாயம் செலுத்த வேண்டும்.
காவல்துறை அனுமதி: ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்துவதற்கு, காவல்துறையினரிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும்.
பாதுகாப்பு உறுதி: கூட்டத்திற்கு வரும் மக்களுக்கான குடிநீர், உணவு மற்றும் பாதுகாப்பைத் தவெக நிர்வாகமே முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும்.
சுகாதாரப் பணி : கூட்டம் முடிந்த பின்பு, பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை முழுமையாகச் சொந்தச் செலவில் தூய்மை செய்து, சுத்தமாகக் காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.
உரிமை கோரக் கூடாது: இந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்த இடத்திற்கு எந்தவிதமான உரிமையையும் தவெக-வினர் கோரக் கூடாது.’

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகே, தவெக-வின் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தூய்மைப்படுத்தும் நிபந்தனை, பொதுவெளியில் கட்சிகளின் சுற்றுச்சூழல் பொறுப்பை வலியுறுத்தும் விதமாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
