‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த கீர்த்தி சுரேஷ் கருத்துக்கு விஜய் ஆன்டனி எதிர்ப்பு!

 
கீர்த்தி
 

 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் வரும் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி, சமீபத்தில் அதிகம் பேசப்படும் ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தினார். ஏஐ மூலம் தனது புகைப்படங்கள் மாறுபடுத்தப்பட்டதாக கூறிய அவர், “இந்த தொழில்நுட்பம் நம்மைத் தாண்டி வேறு திசைக்கு செல்கிறது; இது மிகப்பெரிய பயத்தை தருகிறது” என்றார்.

கீர்த்தி கூறிய இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் நடிகர் விஜய் ஆன்டனியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நேர்மறை கோணத்தில் பார்த்தார். “வரும் காலங்களில் விவசாயிகள் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகம் பயன் அடையலாம். மனித உழைப்பை எளிமைப்படுத்தும் தளமாக இன்று ஏஐ செயல்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

AI தொழில்நுட்பத்தால் பாதிப்பா! - கீர்த்தி சுரேஷ் கருத்தை மறுத்து பேசிய விஜய் ஆண்டனி

‘ரிவால்வர் ரீட்டா’ வெளியீட்டை முன்னிட்டு நடிகை பகிர்ந்த ஏஐ குறித்த அச்சமும், விஜய் ஆன்டனி கூறிய நம்பிக்கைமிகு பார்வையும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!