டெல்லி சென்றடைந்தார் விஜய்... இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர்.. காத்திருக்கும் 56 கேள்விகள்!

 
கரூர் விஜய்

தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சினிமா தணிக்கை விவகாரங்களைத் தாண்டி, அரசியல் ரீதியாக அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த 'சம்மன்' தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி மற்றும் கட்சி மேலிடத்தின் முடிவுகள் குறித்து விஜய்யிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கேட்பதற்காக சுமார் 56-க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயார் செய்து வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இன்று காலை 7 மணிக்கே டெல்லி சென்றடைந்த விஜய், தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார். இன்று மட்டுமின்றி, நாளை மறுநாளும் (ஜனவரி 14) அவரிடம் விசாரணை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் சிபிஐ விசாரணை என்றால், மறுபுறம் அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் சிக்கலில் தவிக்கிறது.

விஜய்

சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி பொங்கல் ரிலீஸ் (ஜனவரி 9) தள்ளிப்போயுள்ளது. அடுத்த விசாரணை வரும் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. தணிக்கைக் குழுவின் பிடிவாதம் மற்றும் சிபிஐ சம்மன் என இருமுனைத் தாக்குதல்களை விஜய் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறார்.

விஜய் தரப்பு ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தாலும், மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே கரூர் விபத்திற்குக் காரணம் என அவர்கள் வாதிட்டு வருகின்றனர். ஆனால், சிபிஐ இப்போது விஜய்யையே நேரடியாக டெல்லிக்கு வரவழைத்திருப்பது, அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!