களத்திற்கு வந்தார் விஜய்... அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்!
Apr 14, 2025, 11:15 IST

இன்று அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்று அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வழக்கமாக தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பனையூரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை செலுத்தி வந்த விஜய் முதன்முறையாக வெளியில் வந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web