விஜய் கார் மறிப்பு… தவெக அலுவலகத்தில் திடீர் போராட்டம்!

 
ajitha
 

 

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்துக்கு இன்று வந்த விஜய்யின் காரை தவெகவினர் மறித்து போராட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் பட்டியல் அறிவிப்பில் தன்னை புறக்கணித்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் இந்த எதிர்ப்பை தொடங்கினார். காலை முதலே தனது ஆதரவாளர்களுடன் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தவெக விஜய்

இன்று மதியம் 1 மணியளவில் விஜய் அலுவலகத்துக்கு வந்தபோது, அவரது காரை மறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாதுகாப்பில் இருந்த போலீஸார் உடனடியாக போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் விஜய் காரை நிறுத்தாமல் நேராக அலுவலகத்துக்குள் சென்றார்.

தவெக

இதனால் மேலும் அதிருப்தி அடைந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. மாவட்டச் செயலாளர் அறிவிப்புகள் தொடரும் நிலையில், இந்த சம்பவம் தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!