“இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர்” ... வேலூரில் விஜய் சவால்!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அங்கு பேசிய விஜய், “இந்த சட்டப்பேரவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்” என்றார். “தமிழ்நாடு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் நேரடி மோதல் இது” என சவால் விடுத்தார்.

“மக்களை நேசிக்கும் நல்ல தலைமையின்மை காரணமாகவே மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த நேரத்தில் வெகுஜன இயக்கமாக உருவானதே தவெக. நம்முடைய ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களை சந்திப்பேன்” என்று உறுதியளித்தார். “எதிர்க்கட்சியாக இருக்கும் நமக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் மக்களின் ஆதரவு நமக்குள்ளது” என்றார்.

“இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையேயானது அல்ல. இது திமுகக்கும் தவெகவுக்கும் இடையேயான போட்டி. தூய சக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் நடக்கும் போராட்டம்” என்று கடுமையாக விமர்சித்தார். “இது ஐந்து ஆண்டுக்கான தேர்தல் அல்ல. ஐம்பது ஆண்டுக்கு ஒருமுறை வரும் வாய்ப்பு. 2026ல் தவெக உறுதியாக வெற்றி பெறும்” என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
