ஹாட் வீடியோ... திமுக இப்படி நம்மளை ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது... விஜய் நேரடி அட்டாக்!

 
விஜய் ஸ்டாலின்

 இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பேசி வாழ்த்து தெரிவித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்து பேசியுள்ளார்.
இது குறித்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ” எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம். இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் என்னுடைய அம்மா..தங்கை..அக்கா அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சந்தோசம் தானே..? பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோசமாக இருக்க முடியும்? அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது எந்த சந்தோஷமும் இருக்காது தானே? அப்படினு நீங்க நினைப்பது எனக்கு புரிகிறது.

நீங்க நாம எல்லாரும் சேர்ந்து தான் இந்த திமுகவை தேர்வு செய்தோம். ஆனால், அவர்கள் நம்மளை இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போதுதானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியது தானே.., மாற்றத்திற்கூறியது தானே…எனவே கவலைப்படாதீர்கள். 2026-ஆம் ஆண்டு நீங்க இல்லை..நாம எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவங்களை மாற்றுவோம்.

விஜய்

அதற்கு இந்த மகளிர் தினமான இன்று நாம் எல்லாருமா சேர்ந்து உறுதியேற்போம். ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்...  விரும்புகிறேன்..எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுடைய மகனா..அண்ணனா..தம்பிய தோழனா..உங்களோடு நான் நிற்பேன்” எனவும் விஜய் அந்த வீடியோவில் பேசியுள்ளார். விஜய் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web