தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!

 
விஜய் சங்கீதா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். லண்டனில் பிறந்து வளர்ந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட சங்கீதா, ஆரம்பத்தில் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து பின்னர் வாழ்க்கைத் துணையாக மாறினார். 1996ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ வெற்றிக்குப் பிறகு சென்னை வந்த அவர், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்தது இவர்களின் உறவுக்கு தொடக்கமாக அமைந்தது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்து மற்றும் கிறிஸ்தவ முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சஞ்சய் வெளிநாட்டில் திரைப்படக் கல்வி முடித்து இயக்குநராக அறிமுகமாக உள்ளார். திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சியில் சங்கீதா முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில காலமாக சங்கீதா பொதுநிகழ்ச்சிகளில் காணப்படாதது சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், விவாகரத்து மனுவில் திருமணத்தை மீறிய உறவு குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!